fbpx
Homeபிற செய்திகள்ஒரே போட்டியில் மூன்று கோப்பைகளை வென்று ட்ராக் போர்ஸ் அணி அசத்தல்

ஒரே போட்டியில் மூன்று கோப்பைகளை வென்று ட்ராக் போர்ஸ் அணி அசத்தல்

டிரீம் லைட் ஸ்போர்ட்ஸ் சார்பாக கோவை செல்வபுரத்தில் க்ராஸ் பார் ஸ்போர்ட்ஸ் செயற்கைப் புல் மைதானத்தில் நடந்த மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 15 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை தட்டிச் சென்றது.

19 வயதுக்குட்பட்ட இறுதி ஆட்டத்தில் 4-&0 என்ற கோல் கணக்கில் பிரைட் அணியையும் 17 வயதுக்குட் பட்டோ ருக்கான போட்டியில் யுனைடெட் அணியை 2-&0 என்ற புள்ளிக்கணக்கிலும் 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 1&-0 என்ற கோல் கணக்கில் ஜெயேந்திரா பள்ளியையும் டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வீழ்த்தியது.

படிக்க வேண்டும்

spot_img