ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலாக அவ்வலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் செப்டம்பர் 2ம் தேதி அன்று முழு பணிநாளாக செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.