fbpx
Homeபிற செய்திகள்ஓமனில் ஆயுர்வேத மையம் திறப்பு

ஓமனில் ஆயுர்வேத மையம் திறப்பு

ஓமன், மஸ்கட், மாபெலாவில் கோயம்புத்தூர் ஆயுர்வேத மையம் (சிஏசி), கோவை ஆர்ய வைத்யா பார்மசி லிமிடெட் டின் சார்பில் துவக்கப்பட்டுள்ளது.

தனியார் சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் முஹன்னா நாசர் அலி முஸாலஹி ஐந்தாவதுசிஏசிகிளை திறப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஓமன் நாட்டிற்கான இந்திய தூதர் அமித் நரங், கோவை ஆர்யவைத்யா பார்மசியின் நிர்வாக இயக்குநர் தேவதாஸ் வாரியர், சிஏசி சேர்மன் யூசுப் அல் அம்ரீ, சிஏசி நிர்வாக இயக்குநர் பாபு கொலாரா, சிஇஓ பிஜேஷ் கொலாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மையத்தில் ஓமனின் தலைசிறந்த ஆயுர்வேத சிகிச்சையும் ஆரோக்கியமான நல வாழ்வுக்கு தகுந்த சிகிச் சையும் அளிக்கப்படும்.

நீண்டகால சிகிச் சைகள் மற்றும் உள்நோ யாளிகளுக்கான சிகிச் சைக்காக சேவை மருத் துவமனையை விஸ் தரிப்பது சிஏசியின் இலக்காகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓமன் முழுவதும் மேலும் நான்கு மையங்களைத் திறக்க வேண்டும் என்பதும் சிஏ சியின் நோக்கம்.

கோயம்புத்தூர் ஆயுர் வேத மையம் ஓமானின் சிறந்த ஆயுர் வேத சாலையாக மாற உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img