fbpx
Homeபிற செய்திகள்கடற்படை தளவாட உள்நாட்டு தயாரிப்பு மையம் கோவையில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் டெல்லி கடற்படை அதிகாரி...

கடற்படை தளவாட உள்நாட்டு தயாரிப்பு மையம் கோவையில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் டெல்லி கடற்படை அதிகாரி தகவல்

கடற்படைக்கான தளவாடங் களை உள்நாட்டிலேயே தயாரிக் கும் வகையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் மகாராஷ் டிரா மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கான ஒரு முழுமையான உள்நாட்டு தயாரிப்பு மையத்தை, கோவையில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக, டில்லி கடற்படை தலைமையக அதிகாரியான ரியர் அட்மிரல் கே.ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

கடற்படை தலைமையகம் (டில்லி) மற்றும் தென் இந்திய கடற்படை தலைமையகம் (கொச்சி) பிரதிநிதிகளுடன், கொடி சியா கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இதில், ரியர் அட்மிரல் கே. ஸ்ரீனிவாஸ், கமோடர் பி.பி.சிங், கமோடர் பாலசுந்தர், கமோடர் என்சி மாம்கெய்ன், கமாண்டர் தீபக் கோட்டா, கமாண்டர் ஆதிஷ் குமார், கமாண்டர் ரோஹித் சேகர், கமாண்டர் வர்கீஸ் ஜார்ஜ், கமாண்டர் மது சுப்பிரமணியன், கமாண்டர் இ. டேவிட், லெப் கமாண்டர் சி.எஸ்.ரூபேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொடிசியா தலைவர் எம்.வி. ரமேஷ் பாபு வரவேற்புரையில், ராணுவத்திற்கு தேவையான தரமான உள்நாட்டு பொருட் களை தயாரிப்பதை ஊக்குவிக்கும் முயற்சி யில் கொடிசியா ஈடுபட்டுள்ளதை இந்திய கடற்படை தலைமையக அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். கடற்படையில் கொச்சி கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் இந்திய விமானப்படையின் 5 பிஆர்டி பிரிவு ஆகியவற்றுடன் கொடிசியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதை தெரிவித் தார். இதற்காக, இருதரப்பும் பயன்பெறும் வகையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்துவதையும் குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறை மற்றும் தொழிற்சாலைகள் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க, கொடிசியாவும் தென் இந்திய கடற்படை தலைமை யகமும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் எடுத் துரைத்தார்.

கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் தொழில் வளர்த்தெடுப்பு மையத் தின், (CDIIC) இயக்குநர் வி.சுந்தரம் பேசும் போது, கொடிசியாவின் சிடிஐஐசி மையம் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகள் பற்றிய செயல்பாடுகளின் முன் னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். உள்நாட்டு தயாரிப்புக்கான பொருட்களைக் கண்டறியும் பணியில் கொடிசியா மற்றும் தென் இந்திய கடற்படை தலைமை யக அதிகாரிகள் ஈடுபட்டு வரு வதை சுட்டிக்காட்டினார்.

இந்த கூட்டு முயற்சி காரணமாக கொடிசி யாவில் உறுப்பினராக உள்ள தொழிலகங்கள் 5 உதிரிபாகங்களை தயாரிப்புக்கு தேர்ந்தெடுத்து இருப்பதையும் கூறினார்.
டில்லி கடற்படை தலைமையக அதிகாரியான ரியர் அட்மிரல் ஸ்ரீனிவாஸ் பேசும் போது, இந்திய கடற்படைக்கு தேவையான உற் பத்தி பொருட்களை தயாரிக்க உள்ள வாய்ப்புகள், தேவைகள், அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். இந்தியாவின் பாது காப்புத் துறை சார்ந்த முதல் புத்தாக்க மையமாக விளங்கும் கொடிசியா மற்றும் சிடிஐஐசி மையத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

கடற்படைக்கான தளவாடங் களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் மகாராஷ் டிரா மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கான ஒரு முழுமையான உள்நாட்டு தயாரிப்பு மையத்தை கோவையில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.
கொடிசியா மற்றும் சிடிஐஐசி யின் செயல்பாடுகள் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.

25-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றன. இதன் தொடர்ச்சியாக கோவையின் ராணுவ தளவாட உற்பத்திக்கான தகுதி நிலையை அறிந்து கொள்ளும் வகையில் எல்ஜி சார் கம்ப்ரசர், எல் அன்ட் டி வால்வுகள், அமர் மீட்டரிங் பம்ப்ஸ், மேக் கண்ட்ரோல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளுக்கு “இண்டஸ்டிரியல் விசிட்” ஏற்பாடு செய்யப்பட்டது.

கொடிசியா கௌரவ செயலாளர் வி.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img