fbpx
Homeபிற செய்திகள்கணித மேதை உமாதாணுவின் ‘அக்கினிக்குஞ்சு’ நூல் வெளியீடு

கணித மேதை உமாதாணுவின் ‘அக்கினிக்குஞ்சு’ நூல் வெளியீடு

கோவை வடவள்ளியில் கணித மேதை உமாதாணுவின் சுயசரி தையான ‘அக்கினிக்குஞ்சு’ நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.

கோவை மனிதநேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவுப் பூங்காவின் பொதுச்செய லாளரும் கணித வல்லுநருமான உமாதாணு தனது 80 ஆண்டு கால பயணம் குறித்து ‘அக்கினிக்குஞ்சு’ என்ற பெயரில் எழுதி உள்ள சுயசரிதை நூல் வெளியீட்டு விழா வடவள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் மனிதநேய பேரவை உலக சமாதான நட்புறவு பூங்கா தலைமை புரவலர் ராமசாமி வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வரலாற்றுக் கவிஞர் ஜீவபாரதி, க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் சுப்பிரமணியம், மனிதநேய பேரவையின் உலக சமாதான நட்பு பூங்கா தலைவர் சுப்பிரமணியன் இணைச்செயலாளர் வீனஸ் மணி, மத்திய வேளாண்மை துறை அமைச்சகம் கூட்டுறவு மேலாண்மை கல்வி நிறுவனத்தின் துணை இயக்குநர் (பணிநிறைவு) ஸ்டான்லி இளங்கோ, எழுத்தாளர் கா.சு.வேலாயுதம், புலவர் சிவஞானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதையடுத்து விஜயர் பதிப்பகம் வேலாயுதம் அக்கினிக்குஞ்சு நூலை வெளியிட புலவர் சிவஞானம் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலயம் அறக்கட்டளை நிறுவனரும் தமிழ்நாடு பாராலிம்பிக் அசோசியேஷன் தலைவருமான சந்திரசேகர், புத்தக ஆசிரியர் உமாதாணுவிற்கு பன்முகச்சாதனையாளர் விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில், வள்ளியம்மன் அறக்கட் டளை தலைவர் செந்தில் பிரபு, சந்திரசேகர், சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ், பேராசிரியர் திலகவதி சண்முகசுந்தரம், உமாதாணுவிடம் கல்வி பயின்ற மாணவர்கள், மனிதநேய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் பேராசிரியர் ஹோமிஹா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img