fbpx
Homeதலையங்கம்கலைஞர் இல்லாத வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார் ஸ்டாலின்

கலைஞர் இல்லாத வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார் ஸ்டாலின்

‘ஸ்டாலின் தான் வர்றாரு’ என்று தேர்தலுக்கு முன்பு ஒலித்த பாடலின்படியே தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் வாழ்த்துக்கள்.

கலைஞர் இல்லாத வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பியிருக்கிறார். அதே சமயம் பத்தாண்டுகளுக்கு மேல் நீடித்த அதிமுகவுக்கும் கணிசமான தொகுதிகளை அளித்து அதை கண்ணியமான எதிர்க்கட்சி தகுதியில் அமர வைத்திருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்.

ஆட்சி பொறுப்புக்கு வரும் திமுகவுக்கு முன்னிருக்கும் எதிர்பார்ப்புகளும், சவால்களும் அதிகம். முதலில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

நிலைகுலைந்த பொருளாதாரத்தை சரிப்படுத்த வேண்டும். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்று திமுக தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குவதை அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய பெருமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்.

இப்படி புதிய ஆட்சிக்கு முன்னிருக்கிற பொறுப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
அத்தனையும் நிறைவேறும் என்ற முழு நம்பிக்கையில் ஆவலுடன் கைதட்டி வரவேற்கிறார்கள், தமிழக மக்கள்.

படிக்க வேண்டும்

spot_img