ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (ஜெஐஎச்) இந்திய மாணவர் இஸ்லாமி அமைப்பு (எஸ்ஐஓ) இணைந்து நடத்தும் கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையத்தை பொள்ளாச்சி பாராளு மன்ற உறுப்பினர் கே.சண்மு கசுந்தரம் நேற்று திறந்து வைத்தார்.
கடந்த சில மாதங்களாக கொரோனா தகவல் மையமாக இருந்த கரும்புக்கடை பழம்பெரும் ஹுதா பள்ளிவாசல் தற்போது மாணவ, மாணவிகளின் கல்வி எதிர்காலத்திற்கு வழிகாட்ட கூடிய கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக் கும் விதமாக இந்த கல்வி வழிகாட்டுதல் – தகவல் மையம் செயல்படவுள்ளது.
இங்கு துறை சார்ந்த வல்லுநர்களின் வழிகாட்டு தல்கள், கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள், மாணவர்களின் ஆர்வமும், திறமையும் கண்டறிந்து அதற்கேற்றார்போல் வழி காட்டுதல்கள், தேசிய, சர்வதேச அளவிலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்கள், கல்வியை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் போன்ற வழிகாட்டுதல்களை நேரடி யாகவும், தொலைபேசியின் வழியாகவும் வழங்கும் வகையில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட தலைவர் பி.எஸ்.உமர் பாரூக் தலைமை தாங்கி கே.சண்முகசுந்தரம் எம்.பியை வரவேற்று வழிகாட்டுதல் மையத்தின் தேவையையும், பணிகளையும் எடுத்து கூறினார்.
கே.சண்முகசுந்தரம் எம்.பி. பேசுகையில், கடந்த 3 மாத காலம் மக்களின் உயிர் காக்கும் சேவையில் இருந்த பள்ளிவாசல் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் தற்போது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு வழி காட்ட கூடிய கல்வி வழி காட்டுதல் மையத்தினை துவங்கியிருப்பது பெரும் சிறப்புக்குரியது
என பாராட்டினார்.
மேலும் இரு மாணவர்களின் உயர்கல்விக்காக கல்வி உதவி தொகையும் இம்மையத்தின் மூலம் வழங்கப்பட்டது. இறுதியாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.சபீர் அலி நன்றி கூறினார்.
நிகழ்வை எஸ்ஐஓ செயலாளர் சார்ஜுன் சிறப்பாக வழிநடத்தினார். மேலும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர்.