fbpx
Homeபிற செய்திகள்காட்பாடியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்

காட்பாடியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்

வேலூர் மாவட்டம் கல்வியில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக மாணவ, மாணவி களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வேலூர் மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி சிறப்பு பயிலரங்கத்தினை, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தினார்.

பள்ளித் தலைமையா சிரியர் கே.எம்.ஜோதீஸ்வர பிள்ளை வரவேற்றார்.
ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் தொகுப்புரையாற்றினார்.

திருக்குறள் இயக்கத் தலைவர் கவிமாமணி அறிவுச்சுடர், கல்வி உலகம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, பள்ளி துணை ஆய்வாளர் அ.மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி வானம் வசப்படும் என்ற தலைப்பில் பேசியதாவது: நீங்கள் இப்போது டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய இளவயது மாணவர்கள்.

உங்களுக்கு நாம் செய்வது சரியா தவறா என முடிவெடுக்க முடியாது. எனவே தாய், தந்தையர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

எனது தந்தை கூறிய கருத்துகளை கேட்டறிந்து அதன் வழி நடந்ததன் விளைவு இன்று நான் அதிகாரியாக இருக்கிறேன். உங்களது வாழ்க்கை சிறப்படைய ஆசிரியர் பயன்படுவார்.

தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகிய மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் மிகச் சிறந்த மாணவர்களாக முன்னேறலாம் என்றார்.

காட்பாடி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.

பட்டதாரி ஆசிரியர் ஜி.டி.பாபு, முதுகலை ஆசிரியை ஆர்.சாந்தி, தொழிற்கல்வி ஆசிரியர் க.ப.சிவஞானம், எஸ்.சச்சிதானந்தம், ஓவிய ஆசிரியர் கே.ஜெ.குணசே கரன், எம்.சோபனா, எஸ். பாலசுப்பிரமணியன், டி.லலிதா, கோபிநாத், சுரேஷ்குமார், ஆர்.கவிதா, சக்திவேல் முத்தூஸ்சர்மில், மகளிர் பள்ளி ஆசிரியர் எம்.மாரிமுத்து, எஸ்.வெங்கடேசன், எம்.சங்கீதா, நிவேதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img