fbpx
Homeபிற செய்திகள்காரியாபட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

காரியாபட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

காரியாபட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை பேரூ ராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 2011க்குப் பிறகு அதிமுக ஆட்சியாளரர்களால் இத்திட்டம் சரியாக நடைமுறை படுத்தப் படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக் கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தமிழக மக்கள் நலம்பெற இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதன் அடிப்படையில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென் னரசு அறிவுத்தலின்படி, காரியாபட்டி பேரூராட்சி 3வது வார்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.

துணை தலைவர் ரூபி சந்தோஷம், கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன் தர்ம முனீஸ்வரி, ஊராட்சி தலைவர் சிவசக்தி, வட்டார மருத்துவர் ஆரோக்கிய ரூபன்ராஜ், கல்குறிச்சி மருத்துவ அலுவலர் நிரஞ்சனதேவி, நேர்முக உதவியாளர் செல்வராஜ், மாவட்ட நலக் கல்வி அலுவலர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் கருப்பையா, எஸ் பி எம் டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, விசிக வழக்கறிஞர் பிரிவு தொகுதி செயலாளர் இனியவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 16 சிறப்பு மருத்துவர்களால் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, கூடுதல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img