தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி இன்று (வியாழன்) காலை நடைபெற்றது.
இதனை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி தொடங்கி வைத்தார்.
இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.