fbpx
Homeபிற செய்திகள்கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா கார் மார்ச் 9 முதல் முன்பதிவு துவக்கம்

கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா கார் மார்ச் 9 முதல் முன்பதிவு துவக்கம்

அதிக ஆவலோடு எதிர்பார்க்கப் பட்ட கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா காருக்கு, மார்ச் 9 முதல் முன்பதிவு செயல்முறை தொடங்கியதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் டொயோட்டா வழங்கும் மிகவும் மிதமான விலையிலான கூல் நியூ கிளான்ஸா, மதிப்பை தேடுகிற வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் முதன்முறையாக டொயோட்டா காரை வாங்க விரும்புபவர்களுக்கும் ஸ்டைலான மற்றும் ஸ்போர்ட்டியான வடிவமைப்பை இலக்காகக் கொண்ட டைனமிக் தோற்றங்களின் உதவியோடு தனித்துவமான டொயோட்டா அடையாளத்தை அழகாக வெளிப் படுத்துகிறது.

கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா, மேனுவல் (MT) மற்றும் ஆட் டோமேட்டிக் டிரான்ஸ்மி ஷன்ஸ்(AMT)ஆகிய இரு வகையிலும் கிடைக்கும் சக்திவாய்ந்த அதே வேளையில் எரிபொருள் திறன் கொண்ட “சீரீஸ் இன்ஜின்” இதில் இடம்பெற்றுள்ளது.

66 KW(89 PS) ஆற்றலுடன் மிகச்சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்க புதிய, மேம்படுத்தப்பட்ட மற்றும் திறன் மிக்க கேஸலின் இன்ஜினாக இது திகழ்கிறது.

டொயோட்டா டிகேஎம்-ன் விற்பனை மற்றும் சந்தையாக்கல் யுக்திக்கான இணை துணைத் தலைவர் அதுல் சூட் கூறியதாவது:

டொயோட்டாவின் இந்திய பயணத்தில் 2019-ம் ஆண்டில் டொயோட்டா கிளான்ஸாவின் அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

ஏனெனில் டொயோட்டாவிற்கு முதன்முறையாக பல புதிய வாடிக்கையாளர்களையும் மற்றும் ஏற்கனவே டொயோட்டாவின் வாடிக்கையாளர்களையும் குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிவிருந்து எங்களிடம் கொண்டு வந்து சேர்த்தது.

இதுவரை, டொ யோட்டா கிளான்ஸா 56,000 யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகியிருக்கிறது. கவர்ச்சியான மற்றும் கூலான இந்த புதிய கிளான்ஸாவைக் கொண்டு வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதன் மூலம் சிறப்பான அனுபவத்தை அவர்களுக்கு வழங்க கவனம் செலுத்துவோம்.

மார்ச் 9 முதல் டொயோட்டா கூல் நியூ கிளான்ஸாவுக்கான முன்பதிவுகள் தொடங்கி நடந்து வருகிறது.

முன்பதிவுகளை ஆன்லைனிலும் www.toyotabharat.com அல்லது அருகிலுள்ள டொயோட்டா டீலர்ஷிப்புக்கு சென்றும் செய்ய லாம். அதிக விவரங்களை www.toyotabharat.com என்ற வலை தளத்தில் காணலாம்.

படிக்க வேண்டும்

spot_img