கோவை மணியகாரம்பாளையம் கேம்ஃபோர்ட் இன்டர்நேசனல் பள்ளியின் 13வது ஆண் டுவிழா மற்றும் நிறுவனர் தின விழா நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பி.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.அப்புக்குட்டி கலந்து கொண்டு நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கண்கவர் நடனமாடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். மேலும், பேண்ட் வாத்திய குழு மாண வர்கள் ‘ஜேம்ஸ் பாண்ட்’, ‘விக்ரம்‘, உள்ளிட்ட படங்களின் இசைகளை தத்ரூபமாக வாசித்து அசத்தினர்.
இந்த விழாவில் பி.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.அப்புக்குட்டி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: இந்தியாவின் கல்வி முறை மதிப்பெண்களை அடிப்படை யாக கொண்டுள்ளது. மாணவர்களின் கல்வி பெரும்பாலும் செய்முறைவடிவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
மாணவர்கள் தங்கள் கல்வியோடு தனித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இங்கு பல திறமை மிக்க மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திறனை பெற்றோரும் ஆசிரியரும் வெளிக்கொணர வேண்டும்.
பாடப்புத்தகத்தில் இருப்பதைக் கடந்து மாணவர்கள் கற்க வேண்டும். மதிப்பெண்களை கொண்டு மாணவர்களின் திறனை கணக்கிடக்கூடாது. கடின உழைப்பை காட்டிலும், ‘ஸ்மார்ட்’ ஆக உழைப்பதே உங்களை உயர்த்தும்.
மாணவர்களின் எதிர்கா லத்தை செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்கள், ஆசிரியர் கள் மற்றும் பெற்றோர் மூவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
ஒரு மாணவரை சிறந்தவராக்கு வதற்கு இது இன்றியமையாத ஒன்று.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் பள்ளியின் தலைவர் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், தலைமையாசிரியை பூனம் சியால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.