fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கலைக் கல்லூரியுடன் கிரீன் குளோப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்குநாடு கலைக் கல்லூரியுடன் கிரீன் குளோப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கிரீன் குளோப் அறக்கட்ட ளையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதில், கல்லூரிச் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி, கிரீன் குளோப் அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் பி.ராஜ்குமார் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் மா.லச்சு மணசாமி, கல்விப்புல முதன்மையர் முனைவர் எஸ்.ஆர்.மதன்சங்கர் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.

பல்வேறு துறைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடையே திறன்களை வளர்த்தல், ஆடை தயாரிப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி, காளான் வளர்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துதல் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

மூன்றாம் பாலினத்தாரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதலையும் இப்புரிந் துணர்வு ஒப்பந்தம் மையமாகக் கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img