கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில், சன் குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, துர்கா ஸ்டாலின் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.