fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தடுப்பு முன்கள பணியாளர் 275 பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் கோவை மலபார் கோல்டு வழங்கியது

கொரோனா தடுப்பு முன்கள பணியாளர் 275 பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் கோவை மலபார் கோல்டு வழங்கியது

மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி கோவை மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் கிளை சார்பாக திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 275 கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.1000 மதிப்புள்ள மொத்தம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை கிராம நிர்வாக அதிகாரியுடன் இணைந்து மலபார் கோல்ட் நிர்வாகிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மலபார் கோல்ட் கோவை கிளை துணைத் தலைவர் முகமது வக்காஸ், வர்த்தக மேலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலபார் கோல்ட் அண்ட் டைமண் ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப் பொறுப்பு முன்முயற்சிகளும் முக்கிய காரணமாகும்.
தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.கோவை மலபார் கோல்டு வழங்கியது

படிக்க வேண்டும்

spot_img