fbpx
Homeதலையங்கம்கொரோனா தொற்று பரவும் அபாயம்

கொரோனா தொற்று பரவும் அபாயம்

தலைநகர் புதுடெல்லியில் கொரோனா தலைவிரித்து ஆடியது. பலி எண் ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. அதன் விளைவாக 3 மாதத்திற்கு மேல் மொத்தமாக முடக்கப்பட்டது.

இதன் விளை வாக தற்போது கொரோனா பாதிப்பு 500 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் கஷ்டப்பட்டு கிடைத்த பலனை இழக்க தயாரில்லை என்று அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவால் இன்னும் ஊரடங்கை முழுமையாக தளர்த்தவில்லை.

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டதால் ஏராளமான மக்கள் பணபரிவர்த்தனைக்காக வங்கிக்கும் ரேஷன் பொருட்களை வாங்க ரேஷன் கடைகளுக்கும் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

அவர்கள் கடைகளில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் நின்றிருந்தனர். தற்போது மாவட்டத்தில் தொற்று குறைந்து வரும் வேளையில் இதன் காரணமாக மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே இதை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். பொதுமக்களும் இதை எதிர்பார்க்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img