fbpx
Homeதலையங்கம்கொரோனா நோயாளிகளுக்கு லேகியத்தை வழங்கலாமே!

கொரோனா நோயாளிகளுக்கு லேகியத்தை வழங்கலாமே!

ஆந்திராவில் நடந்திருக்கும் ஒரு நிகழ்வு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நெல்லூரில் ஆனந்தய்யா என்ற வைத்தியர் ஆயுர்வேத லேகியம் ஒன்றை தயாரித்து அது கொரோனாவை குணப்படுத்துவதாக அறிவித்தது தான் தாமதம், மறுநாளே அந்த கிராமத்தில் 40 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு விட்டனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த லேகியத்தின் தன்மை அறியாமல் வினியோகிக்க கூடாது என்று தடை விதித்தார்கள். ஆனால் அந்த மருந்தின் மாதிரியை ஆயுஷ் துறை எடுத்துச் சென்று ஆய்வு செய்து எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்று உறுதி செய்துள்ளது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், அந்த மருந்தை ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த லேகியத்தை பற்றி கேள்விப்பட்டு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மல்லாரெட்டி என்பவர் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் சுவாசக்கோளாறால் அவதிப்பட்டதால் லேகியம் வாங்குவதற்காக சுமார் 700 கி.மீ கடந்து நெல்லூருக்கு சென்றுள்ளார்.


அங்கு சென்றதும் மருந்து விற்பனை இல்லை என்பதை அறிந்து திகைத்த மல்லாரெட்டி ஒரு மரத்தடியில் மூச்சு திணறலால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடி இருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் சந்திர மோகன் என்பவர் அந்த இளைஞரை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆனந்தய்யாவை அழைத்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரும் நேரில் வந்து ஏதோ ஒரு மூலிகை சாறினை அவரது கண்களில் விட்டுள்ளார். பின்னர் சிறிதளவு லேகியத்தை சாப்பிட கொடுத்துள்ளார்.
அடுத்த 15 நிமிடங்களில் அந்த வாலிபர் சுவாசப் பிரச்சினை நீங்கி ஆரோக்கியமாக எழுந்து நின்றுள்ளார்.


இது சினிமா காட்சி போல் தெரிந்தாலும் நேரில் நடந்த நிஜகாட்சி. இனிமேலாவது அரசு கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு இந்த லேகியத்தை வழங்கச் செய்யலாம் என்று இந்த முன்னாள் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img