fbpx
Homeபிற செய்திகள்கோவையில் எப்என்பி கேக்ஸ் கடை திறப்பு

கோவையில் எப்என்பி கேக்ஸ் கடை திறப்பு

தமிழ்நாட்டில் தனது செயல்பாட்டை வேகமாக விரிவுபடுத்திவரும் எப் என்பி கேக்ஸ் (FNP Cakes ஃபெர்ன்ஸ் அண்ட் பெட்டல்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவு), கோவை அவினாசிலிங்கம் கல்லூரி முதல் கேட்டுக்கு எதிர்ப்புறம், சாய்பாபா காலனியில் புதிய கடையைத் திறந்துள்ளது.

கடையில் வழக்கமான கேக், ஃபான்டண்ட் கேக், டிசைனர் கேக், குக்கீஸ், மஃபின், பாஸ்ட்ரி, மென் மையான பொம்மைகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கிடைக்கும்.

இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது 6 கடைகளுடன் செயல் பட்டு வருகிறது.
ஃபெர்ன்ஸ் அண்ட் பெட்டல்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 400+ சில்லறை விற்பனை கடை கள் மூலம் கேக்குகளையும் மலர்களையும் விற்பனை செய்துவருகிறது.

இவற்றில் 135 கேக் கடைகள். தரக் கட்டுப்பாட்டை உறுதிசெய்வதற்காக, இந்த நிறுவனம் லக்னோ, மும்பை, டெல்லி, பெங் களூரு, பூனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர், பாட்னா உள்ளிட்ட 10 இடங்களில் தயாரிப்புக்கூடங்களை நிறுவியுள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் கேக் டெலிவரி செய்வதற்குப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் வாடிக் கையாளர்களுக்கு தனித் தன்மை கொண்ட அனு பவத்தையும் சிறந்த தரமான தயாரிப்பையும் வழங்க முடிகிறது.

புதிய கடை திறக்கப் பட்டது குறித்து ஃபெர் ன்ஸ் அண்ட் பெட்டல்ஸ் சில்லறை விற்பனை- ஃபிரான்செய்ஸ் சி.ஓ.ஓ. அனில் சர்மா கூறுகையில், ‘பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தும் திட்டத் துடன் எங்கள் நிறு வனம் பெரிதாக வளர்ந்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் புதிய கடைகள் திறக்கப்படும் போது, ஒரே நேரத்தில் மிக அதிகமான ஆர்டர்கள் கிடைப்பதன் மூலம் சிறந்த வரவேற்பைப் பெற்று வரு கிறோம்.

எங்களுடைய கடைகளை தொடர்ந்து விரிவுபடுத்துவதுடன், வழக்கமான-புதிய வாடிக் கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளைப் பெறுவதற்கான அனுபவத்தையும் வழங்குவோம்.

எங்கள் வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகி றோம்’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img