இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , இரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 மற்றும் தமிழ்த் துறை & காட்சி தொடர்பியல் துறை
இணைந்து உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியது.
உலகப் புனித நூலாக திருக்குறளை ஐநா சபை அறிவிக்க வேண்டியும்,
உலக சாதனைக்காகவும் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் இடைவேளையின்றி ஒரே நேரத்தில் 170 பேர் இரத்தினவாணி சமுதாய வானொலியில் நேரலையில் வாசித்து சாதனை படைத்தனர்.
இந்த சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலாளர் முனைவர் மாணிக்கம், கல்லூரி முதல்வர் முனைவர் S.பாலசுப்பிரமணியம், முனைவர் KVP சபரிஷ் ஆய்வுத்துறை புலமுதன்மையர், முனைவர் S N சுரேஷ் கல்லூரி துணை முதல்வர் உட்பட, சிறப்பு விருந்தினர் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் உலக சாதனையாளர் செ. வெங்கடேசன் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்வை காட்சி தொடர்பியல் துறை தலைவர் சதீஷ் ஆனந்தன், இரத்தினவாணி சமுதாய வானொலி நிலை இயக்குனர் முனைவர் ஜெ.மகேந்திரன், தமிழ் துறைத் தலைவர் முனைவர் ந. பரமேஸ்வரி மற்றும் இரத்தினம் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.