fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சைபர் குற்றங்கள் குறித்த ‘மாய வலை’ கருத்தரங்கம்

கோவையில் சைபர் குற்றங்கள் குறித்த ‘மாய வலை’ கருத்தரங்கம்

சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் தன்னார்வ அமைப்பு மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி யில், ‘மாய வலை’ எனும் தலைப்பில் சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இக் கருந்தரங்கில் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொது மேலாளர் திலிப் சிங் யாதவ், பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஜெமினா வின்ஸ்டன், சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் ஜெயராமன், நிர்வாகிகள், ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் கோவை மாநகர காவல் ஆணையர் கூறியதாவது: இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் சமூகவலை தளங்களை பயன்படுத்தும் போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், என்னென்ன தகவல்களை பகிர வேண்டும், எதை பகிர கூடாது என்பது குறித்த ஆன்லைன் ஒழுக்கங்கள் குறித்தும் பகிரப்பட்டுள்ளது.

எந்தவிதமான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகிறது, குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் மாணவிகளை குறிவைத்து சைபர் குற்றங்கள் எந்த மாதிரியாக நடக்கிறது என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

மாநகர காவல் பிரிவில் சமூக ஊடகங்களை கண் காணிக்கும் செல்கள் இருக்கிறது.
அதில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தும் தகவல்கள் குறித்து கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறான தகவல்கள் பரப்புபவர்கள் அவரது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் பரப்பு பவர். எனவே இது போன்ற தகவல்களை கட்டுப்படுத்தவும் நடவடி க்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற எண்ணிற்கு 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இழந்த பணம் பெற்று தரப்படும்.

மேலும் சமீபத்தில் 5ஜி குறித்த புகார்கள் பெறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img