fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பேஜ் 3 சலூன் 2-வது கிளை துவக்கம்

கோவையில் பேஜ் 3 சலூன் 2-வது கிளை துவக்கம்

பேஜ் 3 சலூன் தனது இரண்டாவது கிளையை கோவையில் சாய்பாபா காலனியில் துவக்கியுள்ளது.

இந்த சொகுசான சலூனை முன்னணி பாடகர் சக்திஸ்ரீ கோபாலன், வனிதாமோகன், தனலட்சுமி ஜெயச்சந்திரன், சி.கே. குமரவேல் வீணாகுமராவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பேஜ் 3 என்பதன் பொருளாக, பெயரின் நோக்கமாக சொகுசுத் தன்மையாக விளங்கும். வசதியான மக்களுக்கும், சமுதாயத்தில் பெயர் பெற்றவர்களுக்கும், ஈடுஇணையில்லாத அழகான சேவையாற்றும் சொகுசான சலூன் இது.

இந்த சலூனில் பயிற்சி, சான்றிதழ் பெற்ற மற்றும் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்கள் சேவையாற்றுகின்றனர். தென்னிந்திய அளவில் பல திரைப்பட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து திரை நட்சத்திரங்களுக்கும் பணியாற்றி வருகிறது.

இந்திய அளவில் அழகு கலை மற்றும் ஆரோக்கிய தொழில் முன்னணி வகித்து வரும் சி.கே குமரவேல், வீணா குமரவேல் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையில் உருவானது தான் பேஜ் 3. இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இந்த அழகு கலை சேவையை அளித்துள்ளது.

சர்வதேச அளவில் திறனும், அனுபவமும் கொண்ட சண்முககுமார் இந்த சலூன் தொடரின் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குன ராகவும் பணியாற்றுகிறார்.

பேஜ் 3, பிற சலூன்களை காட்டிலும் வித்தியாசத்தை சேவையில் காட்டுகிறது. சரியான நேரத்திற்கு வாடிக்கையாளர்களின் சேவையை உறுதிப்படுத்துகிறது.
கோவிட் காலகட்டத்திற்கு முன்பிருந்தே கடுமையான கிருமிநாசினி மற்றும் தூய்மை நிலையை பின்பற்றி வருகிறது.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பொருட்களை ஒரு முறை பயன்படுத்தும் வகையில் வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
ஐஎஸ்ஓ 9001 மற்றும் 14000 சான்று பெற்றது. குப்பைகளற்ற சலூன்.

கோவையில் செயல்பட்டு வரும் இந்த சலூன்களின் உரிமையாளர்களாக லதா, சண்முககுமார் உள்ளனர்.

பேஜ் 3 சலூன், கோவை சாய்பாபா காலனியில் அவினாசிலிங்கம் கல்லூரி சாலையில், ஜிசிடி அருகில் இயங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img