fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மீன், இறைச்சி கடைகளுக்கு விடுமுறை

கோவையில் மீன், இறைச்சி கடைகளுக்கு விடுமுறை

நாடுமுழுவதும் கொரானாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அரசு பல்வேறு நோய் தடுப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அதனொருபகுதியாக இரவுநேர ஊரடங்கு மற்றும் அனைத்து ஞா யிற்று கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று சனிக் கிழமை மே 1, அரசு விடுமுறை என்பதாலும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு என்பதால் இரண்டு நாட்கள் மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அரசு தடைவிதித்துள்ளது.

இதனால் கோவை உக்கடம் பகுதியில் செயல் பட்டு வரும் சில்லறை விற்பனை மீன் அங்காடி விடுமுறை அளித்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.

இது சம்பந்தமாக மீன் வியாபாரிகள் கூறுகையில் மீன் விற்பனையை பொறுத் தவரை கோவையில் ஒரு நாளைக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் விசாகப்பட்டினம், மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து தினமும் கோவைக்கு 25 கண்டைனர்களில் மீன் வந்துகொண்டு இருப்ப தாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

படிக்க வேண்டும்

spot_img