fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவமனை ஆய்வகம் தரம் உயர்வு ஐசிஎம்ஆர் அறிவிப்பு

கோவை அரசு மருத்துவமனை ஆய்வகம் தரம் உயர்வு ஐசிஎம்ஆர் அறிவிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்ட றியும் ஆய்வகத்தை தரம் உயர்த்தி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் செயல் பட்டு வந்த உயிரியல் ஆய்வகத்தை வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண் டறியும் ஆய்வகமாக கடந்த கொரோனா நோய்த் தொற்று முதல் அலையின் போது ஐசி எம்ஆர் அறிவித்தது.

தமிழகத்தில் சென்னை கிங்ஸ் நிறுவனத்துக் பின் கொரோனா தொற்று பரிசோதனைக்கான அனுமதி கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஆய்வகத்துக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவையில் கொரோனா பரிசோதனை செய்யும் முக்கிய ஆய்வகமாக இது இருந்து வருகிறது.

இங்கு பரிசோதனை செய்யப்படும் தரத்தின் அடிப்படையில் தரப் பரிசோதனை ஆய்வகமாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தி ஐசிஎம்ஆர் அறிவித்தது.

இங்கு தற்போது 2.500 முதல் 3ஆயிரம் வரை கொரோனா தொற்று மாதிரிகள் தினமும் பரிசோதனை செய்யப் பட்டு வருகின்றன.

பரிசோதனை எண்ணிக்கை, தரம் உள்ளிட்டவை அடிப் படையில் கோவை அரசு மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தை high throughput ஆய்வகமாக தரம் உயர்த்தி ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

இதன் மூலம் கூடுதல் கருவிகள் வழங்கப்படும் என்றும், கூடுதலான பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்றும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வக முதன்மை ஆய்வாளர் என்.மைதிலி கூறியதாவது: அரசு மருத்துவமனை யின் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகத்தில் தினமும் 3 ஆயிரம் கொரோனா தொற்று மாதிரிகள் பரி சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் கூடுதல் கருவிகள் வழங்கப்பட்டு கொரோனா பரிசோதனைகளின் எண் ணிக்கையை 4,500 வரை உயர்த்த முடியும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img