fbpx
Homeபிற செய்திகள்கோவை அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில் 33 வது பட்டமளிப்பு விழா உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்றார்

கோவை அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியில் 33 வது பட்டமளிப்பு விழா உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்றார்

தேசிய மதிப்பீட்டில் ஏ ப்ளஸ் ப்ளஸ், என்ற தகுதியும் தரத்தில், நான்கில், 3.65 மதிப்பெண்களும் பல்கலைக்கழக தர வரிசையில் 75 வதும் பெற்றுள்ள, கல்வி நிறுவனமாக அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகின்றது, இங்கு இன்று கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா கலந்து கொண்டு அனைத்து மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார். இதில் அனைத்து துறை சார்ந்த 85 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

72 மாணவியர்களுக்கு, பி ஹெச்டி முனைவர் பட்டங்களும், 22 மாணவிகளுக்கு எம் பில், ஆய்வியல் நிறைஞர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
46 மாணவிகளுக்கு முதுநிலை பட்டமும், 2047 மாணவிகளுக்கு இளநிலைப் பட்டமும் வழங்கப்பட்டது, இந்த விழாவின் வாயிலாக, பதக்கங்கள் மற்றும் பட்டங்களை பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் பட்டங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியானது இக்கல்லூரியின் வேந்தர், மற்றும் பேராசிரியர் தியாகராஜன், தலைமையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் அவினாசிலிங்கம் கல்லூரியின் நிர்வாக அறங்காவ லர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், துணைவேந்தர் பாரதி ஹரி சங்கர், பதிவாளர் முனைவர் கௌசல்யா, மற்றும்
கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

படிக்க வேண்டும்

spot_img