fbpx
Homeபிற செய்திகள்கோவை சேரன் மாநகர் பகுதியில் புதிய தபால் நிலையம்

கோவை சேரன் மாநகர் பகுதியில் புதிய தபால் நிலையம்

சேரன் மாநகர் மக்களின் சார்பாக அப்பகுதி உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் மூலம் அப்பகுதிக்கு ஒரு புதிய தபால் நிலையம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை அஞ்சல் தபால் இலாகாவினால் நிறைவேற்றப்பட்டது.


தற்போது வரை அப்பகுதி மக்கள் தங்கள் சேவைகளுக்காக 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விளாங்குறிச்சி கிளை அஞ்சலகத்தையே சார்ந்து இருந்தார்கள்.

ஆனால் இப்போது அஞ்சல் சேவைகளை அவர்கள் பகுதிலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய துணை அஞ்சலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கோவை முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் முன்னிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிருந்தா, விளாங்குறிச்சி மற்றும் சேரன்மாநகர் வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் செயலாளர் சுந்தரராஜன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img