fbpx
Homeபிற செய்திகள்கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதலமைச்சாரின் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நிதி வழங்கியது

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதலமைச்சாரின் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நிதி வழங்கியது

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார் அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து முதலமைச்சாரின் நிவாரண நிதிக்கு ரூபாய் இரண்டு கோடிக்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சி.சமயமூர்த்தி அவர்களும் உடனிருந்தனர்.

இந்நிதியானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர், வேளாண் உதவி அலுவலர்கள், நிரந்தர பண்ணை தொழிலாளர்கள் ஆகியோர்கள் தாமாக முன்வந்து அளித்த இரண்டு நாள் ஊதியமும் மற்றும் மாணவர்களின் பங்களிப்பும் சேர்ந்ததாகும்.

தமிழக பல்கலைக்கழகங்களில் முதலாவதாக முன்வந்து இந்நிதியளித்தமைக்காக முதலமைச்சர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img