கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் முத்துராமலிங்கம் வீதி, பாரதிநகர், பெருமாள் கோவில் வீதி, பூமார்க்கெட் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய பகுதிகளில் உள்ள 7 நியாய விலைக்கடைகளில் நேற்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, சர்க்கரை ஆகியவற்றின் எடை, குடும்ப அட்டை பதிவு குறித்து ஆய்வு மேற்கொண்டு, நியாய விலைக்கடைகளில் அரசின் நிவாரணத் தொகை, பொதுவினியோக பொருட்கள் உள்ளிட்டவை தடையின்றி கிடைப்பது குறித்தும் குடும்ப அட்டைதாரர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் பழனிசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பொருட்கள் வாங்க வருகை தரும் முதியோர்களுக்கு முன் னுரிமை அடிப்படையில் பிரத்யேக வரிசை ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட் களை விநியோகிக்க அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நிவாரணத் தொகையின் முதல் தவணைத் தொகை மாநிலம் முழுவதிலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டா வது தவணைத் தொகை, ரூ.405 மதிப்புள்ள 13 வகையான அத்தியாவ சிய மளிகைப் பொருட்கள் வழங்குவ தற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 11.06.2021 முதல் 14.06.2021 வரை நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் 15.06.2021 அன்று முதல் இரண்டாம் தவணையான ரூ.2000ம் மற்றும் 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.