fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராக பதவியேற்ற லக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேட்டி - ‘அடிப்படை...

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராக பதவியேற்ற லக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேட்டி – ‘அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காண்பேன்’

அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் -கிழக்கு மண்டல தலைவராக பொறுப்பேற்ற இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கூறினார்.

கோவை மாநகராட் சியின் கிழக்கு மண்டல தலைவராக 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் லக்குமி இளஞ்செல்வி கார்த்திக் இன்று கிழக்கு மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறிய தாவது:- கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தை பொறுத்தவரை, குடிநீர் பிரச் சினை, சாக்கடைப் பிரச் சினை, சாலைப் பிரச்சி னைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யவும், சாக்கடை கழிவுகள், குப்பைகளை உடனடியாக அகற் றவும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, மோசமான சாலைகளை செப்பனிடவும், புதிய தார் சாலைகள் அமைக்கவும், அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமும், மாநகராட்சியின் நிதிகளையும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கிழக்கு மண்டலத்தை சீர்மிகு மண் டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரத்தின் போது, வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தேன் அப் போது, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), கவுன்சிலர் சிங்கை மு.சிவா, ப. பசுபதி, ஆர் .எம்.சேதுராமன், மு.மா. ச.முருகன், மா.செல்வராஜ், சிங்கை பிரபாகரன், வி.லட் சுமணன், முன்னாள் கவுன்சிலர் சிங்கை பிரபாகரன், கவுன்சிலர்கள் பி.மாரிச்செல்வன், சாந்தா மணி பன்னீர்செல்வம், சாந்திமுருகன், சித்ரா மணி, கீதா சேரலாதன், முபசீரா பஹ்ருதீன், தீபா இளங்கோ, வித்யா ராமநாதன் மற்றும் வே.பாலசுப்பிரமணியம், மா.நாகராஜ், இரா.சேரலாதன், வி.ஐ. பஹ்ருதீன், புதூர் மணிகண்டன், கல்பனா செந்தில், மு.மனோகர், ராமகிருஷ்ணன், தென்னவர் செல்வம், மேகநாதன், ராஜேந் திரன், சண்முகம், கஸ்தூரி அருண், சின்னமணி, பூர்ண சந்திரன், சி.எஸ்.முருகேஷ், சிங்கைசௌந்தர், சீமான் சுந்தரம், போனஸ் பாபு, ஆர்.செல் வராஜ் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img