fbpx
Homeபிற செய்திகள்கோவை ரெசிடென்சி ஓட்டலில் அனைத்து மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி - விற்பனை தொடங்கியது

கோவை ரெசிடென்சி ஓட்டலில் அனைத்து மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி – விற்பனை தொடங்கியது

அனைத்து மாநில கைவினை பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்கவிழா இன்று (25-ம்தேதி) காலை 10 மணிக்கு கோவை ரெசிடென்சி ஓட்டலில் தொடங்கியது.

விழாவிற்கு வந்த அனைவரையும் “ கோ கிளைம்“ நிர்வாக இயக்குனர்கள் ஹீனா, ராகுல், ஆகியோர் வரவேற்றனர். விழாவில் சிறப்பு அழைப் பாளர்களாக சந்திரன் ஸ்டீல் நிர்வாக இயக்குனர் சுரேகா, வக்கீல் விவில்யா, பெண்கள் சர்க்கிள் சங்க தலைவர் சுவேதா, டைமன் வியாபாரி வர்சா பாயில், சரணாலயம் சரண்யா ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.

இதுகுறித்து “கோ கிளைம்“ இயக் குனர்கள் கூறியதாவது:-
இந்த கண்காட்சி விற்பனை இன்று தொடங்கி வருகிற 27ந் தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது

இதில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 40 ஸ்டால்கள் இடம்பெற்று உள்ளன. அனுமதி இலவசம். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img