கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் மாதிரி சாலையின் ஒருபகுதியாக மிதிவண்டி பாதை, தாமஸ்பார்க் சந்திப்பில் மீடியா டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடிக்கவும், மேலும் தேவைப்படும் இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.