கோவை மாவட்டம் சூலூரில், பஞ்சாப் நேஷனல் வங்கி கோவை வட்டாரத்தின் 55 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. புதிய கிளையை வங்கியின் மண்டல மேலாளர் மகேந்தர் பெரியசாமி குத்துவிளக் கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வங்கியின் கோவை வட்டாரத் தலைவர் விஎஸ்விவிஎஸ்.ஸ்ரீனிவாஸ், கிளை மேலாளர் கௌதம் மற்றும் வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பஞ்சாப் நேச ஷனல் வங்கியின் சேவை குறித்து கோவை மண்டல மேலாளர் மகேந்தர் பெரியசாமி பேசியதாவது: வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து வங்கி சேவைக ளையும் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கி வருகிறது. நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு துவங்கி சேவைகளைப் பெறலாம். 405 நாட்களுக்கு நிரந்த வைப்புத்தொகை (பிக்சட் டெபாசிட்) செலுத்துபவர்களுக்கு 6.10 சதவீத வட்டி வழங்கப்படும்.
குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.கார் மற்றும் வீட்டுக்கடன் பெறுவோ ருக்கு சலுகையாக 30.9.22 வரை பரிசீல னைக் கட்டணம் கிடையாது. மேலும் சிறுகுறு தொழில் கடன், வேளாண் கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன், கார் கடன் வாங்கும் பெண்களுக்கு 0.25 சதவீத வட்டிச்சலுகை அளிக்கப் படுகிறது.பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேவை களை பயன்படுத்தி பலனடையுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அவர் பேசினார்.