கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகு தியில் 3 வது முறையாக போட்டியிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி.வேலுமணி ஹாட்ரிக் வெற்றி பெற்றார்.
கடந்த 2006ம் ஆண்டு பேரூர் தொகுதியிலும் அதைத்தொடர்ந்து 2011 மற்றும் 2016 சட்ட மன்றத் தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் நடை பெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி மீண்டும் போட்டியிட்டார்.
எஸ்பி.வேலுமணி 123538 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை 42709 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றார்.