பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் 100-வது பிறந்தநாள் விழா மற்றும் கௌதம் அதானியின் 60-வது பிறந்தநாள் இந்த ஆண்டு அனுசரிக்கப்படுவதையொட்டி, பல்வேறு சமூக சேவை நோக்கங்களுக்காக ரூ.60 ஆயிரம் கோடியை நன்கொடையாக வழங்குவதாக அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. இந்த நிதியம் அதானி ஃபவுண்டேஷனால் நிர்வகிக்கப்படும்.
வளர்ச்சிக்கு மிக முக்கியமான பிரிவுகள் அனைத்திலும் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னேற்ற முயற்சிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு சமூகங்களுடன் இணைந்து செயல்படுவதில் செழுமையான அனுபவத்தை அதானி ஃபவுண்டேஷன் பெற்றிருக்கிறது.
‘எனக்கு உத்வேகமளித்த தந்தையின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்ட ஆண்டாக இருப்பதோடு, எனது 60-வது பிறந்த நாள் அனுசரிப்பு ஆண்டாகவும் இந்த ஆண்டு இருக்கிறது. ஆகவே, சுகாதாரம், கல்வி மற்றும் திறன்மேம்பாடு ஆகியவை தொடர்பான அறச்செயல் மற்றும் சமூகசேவை நடவடிக்கைகளுக்காக, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், ரூ.60,000 கோடியை நன்கொடையாக வழங்க எங்களது குடும்பம் முடிவு செய்திருக்கிறது’ என்றார் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி.
“பெரிய செயல்திட்டங்களை திட்டமிடுதலி லும், அதனை செயல்படுத்துவதிலும் நாங்கள் பெற்ற அனுபவமும் மற்றும் அதானி ஃபவுண்டேஷன் செய்திருக்கும் பணிகளில் கிடைத்திருக்கும் கற்பிதங்களும், இந்த செயல்திட்டங்களை துரிதமாக அமல்படுத்துவதற்கு உதவும். ‘நற்பண்புடன் வளர்ச்சி’என்ற எமது குழும கோட்பாட்டை பூர்த்தி செய்யும் குறிக்கோளுடன் அதானி ஃபவுண்டேஷனின் பயணத்தில் ஒரு சிறப்பான மாற்றத்தை உருவாக்க பேரார்வம் கொண்டிருக்கும் மிகச்சிறந்த அறிவாளிகள் மற்றும் ஆளுமைகளிடமிருந்து சிறந்த ஆலோசனையைப் பெற்று செயல்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டிருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
அஸிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷனின் தலைவரும் மற்றும் விப்ரோ லிமிடெட் நிறுவனர், தலைவருமான அஸிம் பிரேம்ஜி பேசுகையில், “நாட்டில் நிலவுகின்ற சவால் களும், இருக்கின்ற வாய்ப்புகளும் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடும்பமாக செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்து கின்றன.
செல்வம், பிராந்தியம், மதம், ஜாதி மற்றும் இன்னும் நம்மை பிரிக்கும் பிற பிளவுகள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ளி ஒருங்கிணைய வேண்டும்,” என்றார்.
இந்தியாவில் 16 மாநிலங்களில், 2409 கிராமங்களில் வசிக்கும் 3.7 மில்லியன் நபர்களை அதானி ஃபவுண்டேஷனின் சேவைகள் சென்றடைகின்றன.