fbpx
Homeதலையங்கம்சரியான தீர்ப்பு!

சரியான தீர்ப்பு!

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் கிடையாது என்ற அபார தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. இது சரியான தீர்ப்பாகும். வரவேற்கிறோம். நீதிபதி ஆஷாவைப் பாராட்டுகிறோம்.

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் வயதான காலத்தில் தன்னை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெற்றோர் மற்றும் மூத்தோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2017ன்படி மூத்த மகனின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர அனுமதி வழங்கினார்.

சொத்து மீதான உரிமை பெற்றோருக்கு உண்டு என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி... என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய நீதிபதி. சமுதாயத்தின் பொதுப்பண்புகளை இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது சமூகம் இந்த விழுமியத்தின் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் கிடையாது என்பது சரியான தீர்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img