மேஜிக் கலையில் உயரிய ஆஸ்கர் விருது என அறியப்படும் சர்வதேச மெர்லின் விருதை கோவையை சேர்ந்த மேஜிக் கலைஞர் டிஜோ வர்கீஸ் வென்று சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கோவை குணியமுத்தூர் பகுதியை சேர்ந்த மேஜிக் கலைஞர் டிஜோ வர்கீஸ்.தேசிய,சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை குவித்துள்ள டிஜோ வர்கீஸ் தற்போது மேஜிக் கலையில் ஆஸ்கர் என அறியப்படும் உயரிய விருதான மெர்லின் விருதை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்ற சர்வதேச மேஜிக் கார்னிவல் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1500 மேஜிக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த மேஜிக் நிபுணராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிஜோ வர்கீஸிற்கு சர்வதேச மெஜீசியன் சொசைட்டியின் தலைவர் டோனி ஹாசின் மெர்லின் விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் கலைஞராக இந்த உயரிய விருதை பெற்றுள்ள டிஜோ வர்கீஸ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
மேஜிக் கலையில் ஆஸ்கர் என அறியப்படும் மெர்லின் விருதை பெற்றதை மிக்க மகிழ்ச்சியாக கருதுவதாகவும்,இதற்கு உறுதுணையாக இருந்த தமது குடும்பத்தினர் மற்றும் தமது மனைவி பிங்கி வர்கீஸ் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.