fbpx
Homeபிற செய்திகள்சார் பதிவாளர் அலுவலகங்களில் புகார் மையம் அமைக்கப்படும்

சார் பதிவாளர் அலுவலகங்களில் புகார் மையம் அமைக்கப்படும்

மதுரை,
பத்திரப்பதிவு முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக விரைவில் புகார் மையம் அமைக்கப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி கூறினார்.

மதுரை திருமலை நாயக்கர் மஹால் சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:


தமிழகம் முழுவதும் பொது முடக்கத்தில் திங்கள்கிழமை முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி

பத்திரப்பதிவு அலுவலகங்கள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்களில் அரசின் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

பத்திரப்பதிவு நடைமுறைகளை இடைத்தரகர்கள் தலையீடு இன்றி முறையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் வந்தால் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக விரைவில் புகார் மையம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img