fbpx
Homeபிற செய்திகள்சிவகங்கை மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்தோர் 42 கல்லூரிகளைச் சேர்ந்த 1759...

சிவகங்கை மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்தோர் 42 கல்லூரிகளைச் சேர்ந்த 1759 பேர்

சிவகங்கை மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத் தினை செயல்படுத்திடும் பொருட்டு, முதற்கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, வங்கி அட்டைகள், பெட்டகப் பை வழங்கப்பட்டன.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தினை முதல்வர் கடந்த 5.9.2022 அன்று சென்னையில் தொடங்கி வைத்து, காணொலிக் காட்சியின் வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவிகளுக்கு முத்தான கருத்துகளையும் எடுத்துரைத்தார்.

கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருதப்படும் என்ற அடிப்படையில், அனைவரும் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் முதல்வர் புதிதாகவும் பல்வேறு முன்னோடி திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, அதனை அறிவித்து, கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தி வருகிறார்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உண்டு உறைவிடம், இலவச பேருந்து பயண அட்டை, சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்கி, பெற்றோர்களுக்கு பொருளாதார ரீதியான சிரமத்தையும் குறைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தினை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்திடும் வகையில், ரூ.698 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, ‘புதுமைப் பெண்’ திட்டத்தினை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு, முதற்கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்வை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

“பேருதவியாக இருக்கிறது”
‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரி மாணவி கு.காவியா தெரிவித்ததாவது:
மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் படித்து வருகிறேன்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நல்ல மதிப்பெண் பெற்று, இக்கல்லூரியில் சேர்ந்தேன். தந்தை கூலி வேலை செய்து வருகிறார். அவர் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயினைக் கொண்டு, நான் மற்றும் எனது சகோதரர்கள் பயின்று வருகிறோம்.

என்னைப் போன்ற மாணவிகள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்குப்பதற்காக, முதல்வர் புதுமைப்பெண் திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் எங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்தி தந்துள்ளார்.

இதன்மூலம் எனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன். என் குடும்ப பொருளாதார சூழ்நிலைக்கும் இவை பேருதவியாக அமைந்துள்ளது. என்னைப் போன்ற மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்திய முதல்வருக்கு என்னுடைய சார்பிலும், குடும்பத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் காவியா.

“படிப்புச் செலவுக்கு பயன்படுத்துகிறேன்”
‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரி மாணவி சீ.ஹரிணி தெரிவித்ததாவது:
இரண்டாம் ஆண்டு பிபிஏ. பிரிவில் படித்து வருகிறேன்.

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவி. குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நல்லமுறையில் பயின்று தற்போது இக்கல்லூரியில் பயின்று வருகிறேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.

சகோதரர், சகோதரி உள்ளனர். எங்களது பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்திற்காகவும், எங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கெனவும் எனது பெற்றோர் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதை அறிவேன்.

தற்போது, முதல்வர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தினை அறிவித்து, பெண்கள் உயர்கல்வியை பெறுவதற்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கி வருகிறார். இத்தொகை எனது படிப்புச் செலவிற்கும், செமஸ்டர் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட தேவைகளை நானே நிவர்த்தி செய்து கொள்வதற்கு, மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

கல்லூரிக்கு வருவதற்கு நகரப் பேருந்தில் கட்டணமின்றி பயணிப்பதற்கும் வழி வகை செய்துள்ளார். இது போன்று பெண்களின் நிலையை கருத்தில் கொண்டும் எண்ணற்ற திட்டங்களை தமிழ கத்தில் செயல்படுத்தி வருகிறார்.

முதல்வருக்கு எனது சார்பிலும், கல்லூரி மாணவிகள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஹரிணி.

தொகுப்பு:
இரா.சண்முகசுந்தரம்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மு.ராஜசெல்வன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
சிவகங்கை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img