fbpx
Homeபிற செய்திகள்சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் - போஷ் நிறுவனம் தொடங்கியது

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் – போஷ் நிறுவனம் தொடங்கியது

ராபர்ட் போஷ் என்ஜினியரிங் அண்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்று முன்பு அழைக் கப்பட்டு வந்த போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் அதன் 25 ஆண்டுகால மரபைக் கொண்டாடும் வகையிலும் வலுவான 25,000 ஊழியர்கள் கொண்ட குழு செயல்படுவதை பிரதிப லிக்கும் வகையிலும், 25,000 மரக்கன்றுகள் நடுவு செய்யும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

சிறிய அளவிலான இந்த காடு வளர்ப்பு முயற்சிக்காக “பாரஸ்ட்ஸ் பை ஹார்ட்ஃபுல்னெஸ்” அமைப்புடன் கைகோர்த்துள்ளது.

கோவை, பெங் களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட இருக்கு ம் இந்த மரக் கன்றுகள் நடும் முயற்சி நேற்று (பிப்.24) தொடங்கி உள்ளது.

போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக் னாலஜிஸ் மொபிலிட்டி என்ஜினியர் மற்றும் மெம்பர் ஆஃப் எக்சிக் யூடிவ் லீடர்ஷிப் – எஸ்விபி (SVP) ஆர்கே ஷெனாய் கூறும்போது, “வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் கவனம் செலுத்துகிறது.

அதற்கேற்ப புத்திசாலித்தனமாகவும் இணைப்பை ஏற்ப டுத்தும் வகையிலும் சுற்றுச் சூழ லுக்கு உகந்ததாகவும் உள்ள தயாரிப்புகளையும் உயர்தர தொழில்நுட்பத் தீர்வுகளையும் வழங்குகிறோம்.

இந்தியாவில் நாங்கள் 25 ஆண்டு காலமாக செயல்பட்டு வருவதைக் கொண்டாடும் வகையிலும் சமீபத்தில் போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்கிற பெயரில் ரீபிராண்ட் செய்யப்பட்டதையும் இந்த முயற்சியின் மூலம் கொண்டாட இருக்கிறோம்.

ஏரிகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் மேற் கொண்டு வருகிறது.

கிரகத்தின் சூழலியல் சமநிலையை பாதுகாப்பதிலும் நிர்வகிப்ப திலும் இது மற்றுமொரு சிறிய முன்னெடுப்பு. உள்ளூர் மக்களுடன் இணைந்து நம்மால் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் அடுத்த தலைமுறைக்காக ஆரோக்கியமான சுற்று ச்சூழலை உருவாக்கவும் முடியும்,” என்றார்.

ஹார்ட்ஃபுல்னெஸ் பிரெசிடெண்ட் மற்றும் வழிகாட்டி கமலேஷ் படேல் கூறும்போது, “இயற்கையான சுற்றுச் சூழலை மீட்டெடுப்பதற்கு ஏராளமான தாவரங்கள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்.

இந்த அளவை எட்டுவது என்பது ஒரே நாளில் ஒரே ஒரு நிறுவனத்தின் முயற்சியால் சாத்தியமாகாது.

கார்ப்ப ரேட்கள், அரசாங்கங்கள், என்ஜிஓ-க்கள், வனவியல், தனிநபர்கள் என அனைத்து பங்குதாரர்களும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img