fbpx
Homeபிற செய்திகள்சூலூர் பேரூராட்சியில் வரி வசூல் தீவிரம்

சூலூர் பேரூராட்சியில் வரி வசூல் தீவிரம்

சூலூர் பேரூராட்சியில் வரி வசூல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சொத்து வரி குடிநீர் கட்டணம் குத்தகை இனம் தொழில் வரி மற்றும் உரிமை கட்டணங்கள் வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

துவக்கத்தில் வார்டு வாரியாக சென்று அங்குள்ள மண்டபம் சமுதாயக்கூடம் மற்றும் பொது இடங்களில் அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பணிகளால் வசூல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது தேர்தல் பணிகள் முடிவுற்ற நிலையில் மீண்டும் வரி வசூல் செய்வதை பேரூராட்சி நிர்வாகம் வேகப்படுத்தி உள்ளது.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் குமார் கூறுகையில் இதுவரை 70 சதவீதம் வரி வசூல் ஆகியுள்ளது.

வரும் 31-ம் தேதி வரை வார்டு வாரியாக வரி வசூல் செய்யும் பணி நடக்கும் பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரிகளை செலுத்தலாம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img