fbpx
Homeபிற செய்திகள்சென்னை கிராமப் பெண் விவசாயிகளுக்கு ஆதரவு சொடெக்ஸோ உடன் இணையும் அதானிஃபவுண்டேஷன்

சென்னை கிராமப் பெண் விவசாயிகளுக்கு ஆதரவு சொடெக்ஸோ உடன் இணையும் அதானிஃபவுண்டேஷன்

இயற்கை சாகுபடியை ஊக்குவிக்க கிராமப் பெண் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க சொடெக்ஸோ உடன் அதானி ஃபவுண்டேஷன் கைகோர்த்துள்ளது.

அதானி ஃபவுண்டேஷன், காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை சாகுபடி முறைகளை தங்களது வயல்களிலும், தோட்டங்களிலும் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கவும் பல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு தங்களது நிலங்களில் குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்குத் தோழமையான ஆர்கானிக் (இயற்கை சாகுபடி) வழிமுறைகளை மேற்கொள்வதற்கு 30 விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டது.

இச்செயல்முயற்சியில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் இந்த ஆண்டு 300 விவசாயிகள் பயனடையுமாறு, 300 ஏக்கர்களில் இயற்கை சாகுபடி வழிமுறையில் நெல் பயிரிடுவதற்குத் தேவையான ஆதரவும், உதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

2022 உலக உணவு தின நிகழ்வின்போது 600 பெண் விவசாயிகளுக்கு நிலைப்புத்தன்மையுள்ள வாழ்வாதாரங்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு சொடெக்ஸோ இந்தியா, அதன் ஸ்டாப் ஹங்கர் டிரஸ்ட் வழியாக அதானி ஃபவுண்டேஷன் உடன் கைகோர்த்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் செயல்திட்டத்தின் கீழ், மீஞ்சூர் வட்டாரத்தைச் சேர்ந்த மீஞ்சூர் மருதம் ஃபார்மர்ஸ் புரொடியூசர் கம்பெனி லிமிடெட் – ஐ சேர்ந்த பெண் விவசாயிகளால் விளைவிக்கப்படும் 500 கி.கி. பச்சைப்பயறை ஒவ்வொரு மாதமும் கொள்முதல் செய்ய சொடெக்ஸோ இந்தியா திட்டமிட்டிருக்கிறது.

கூட்டு விவசாய முறையை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு 126 உறுப்பினர்களை உள்ளடக்கிய பெண் விவசாயிகள் குழுக்களை உருவாக்குவதற்கு அதானி ஃபவுண்டேஷன் உதவியிருக்கிறது.

இந்த முன்னோடி மாதிரி செயல்திட்டத்தை சென்னையில் அதானி ஃபவுண்டேஷனோடு சேர்ந்து சொடெக்ஸோ இந்தியா தொடங்கியிருக்கிறது.
சென்னையிலும் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 40+ வாடிக்கையாளர் தொழிலக அமைவிடங்களில் 35 உணவுகளை சொடெக்ஸோ நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த பெண் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் மற்றும் சொடெக்ஸோ உடனான அவர்களது வர்த்தக அளவை ஒவ்வொரு ஆண்டும் 20% அதிகரிக்கவும் சொடெக்ஸோ இந்தியா திட்டம் வகுத்திருக்கிறது.

ஸ்டாப் ஹங்கர் (பசிப்பிணியை ஒழிப்போம்) என்பது சொடெக்ஸோ நிறுவனத்தின் தனித்துவமான அறச்செயல் செயல்திட்டமாகும்.

படிக்க வேண்டும்

spot_img