fbpx
Homeபிற செய்திகள்சேலம் சுக்கம்பட்டி அரசு பள்ளியில் 127 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

சேலம் சுக்கம்பட்டி அரசு பள்ளியில் 127 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

சேலம் சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் 11 ம் வகுப்பு பயிலும் 127 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயின்ற 59 மாணவர்கள் மற்றும் 68 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் இன்று வழங்கப்பட்டது.

மேல்நிலைப் பொதுத்தேர்வில் 97 % தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளியில் இப்பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. சேலம் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் 350 பள்ளிகளில் இப்பள்ளி அணியினர் 3வது இடம் பெற்றுள்ளனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அயோத்தியாபட்டினம் ஒன்றியத்தில் இப்பள்ளி தூய்மை பள்ளி என சிறப்பிடம் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அயோத்தியாபட்டினம் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா விஜயகுமார்,சுக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் படையப்பன் (எ) முருகன்,3 வது வார்டு கவுன்சிலர் பிரீத்தி மோகன்,8 வது வார்டு கிளைச் செயலாளர் வி.எம்.பி. தமிழ்ச்செல்வன், பஞ்சாயத்து செயலாளர் எம். சிவக்குமார், சுக்கம்பட்டி மேல்
நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெ. அருள் பிரசாத், ஆசிரியர் சரவணன் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img