fbpx
Homeபிற செய்திகள்சைபர் மோசடியில் ரூ.40.81 லட்சம் முடக்கப்பட்டுள்ளது -கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பேட்டி

சைபர் மோசடியில் ரூ.40.81 லட்சம் முடக்கப்பட்டுள்ளது -கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பேட்டி

சைபர் மோசடி தொடர்பான புகார்களின் பேரில் ரூ.40 லட்சத்து 81 ஆயிரத்து 113 முடக்கப்பட்டுள் ளதாகவும், பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள் ளார்.

கோவை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்த அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சைபர் கிரைம் காவல் நிலையம் துவங்கி செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேஷனல் சைபர் க்ரைம் ரிப்போர்ட் போஸ்டல் மூலமாகவும் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பண மோசடி தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டில் 21 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி தொடர்பான புகார்களின் பேரில் இதுவரை ரூ.18.57 லட்சம் கைப்பற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. மேலும், ரூ.40லட்சத்து 81 ஆயிரத்து 113 முடக்கப்பட்டு உரிய வர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக நடப்பு ஆண்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் மூன்று நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

பணமோசடி குற்றங்களை தடுக்க 1930 என்ற கட்டணமில்லா தொலை பேசி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டால் உடனடியாக இந்த தொலைபேசி எண்ணில் புகார் அளித்தால் உடனடியாக இழந்த பணத்தை மீட்க முடியும்.

இணையதள குற்றங்கள் அதிகமாக தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பாதிக்கப்பட்டோர்.


வங்கியில் இருந்து பேசுவது போன்றும், கஸ்டமர் கேரில் இருந்து பேசுவது போன்றும் மோசடி கள் நடக்கிறது. கோவையில் புறநகர் பகுதிகளில் வாகன சோதனை நடத் தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 74 வழக்குகள் பதியப்பட்டுள் ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img