சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து முடித்த 1,594 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்ட மளிப்பு விழா கல்லூரியில் உள்ள பல்கலைக்கழக கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் வள்ளி யப்பா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் எமரிட்டஸ் பேராசிரியரும், உயிரியியல் அறி வியல் தேசிய மையத்தின் முன்னாள் இயக்குனருமான டாக்டர் கிருஷ்ணசுவாமி விஜயராகவன், 15 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறப்பிடம் பெற்ற 40 மாணவ, மாணவிகள் உள்பட 1,594 பேருக்கு பட்டங்களை வழங்கியும் பேசியதாவது:
இந்த கல்லூரி சிறந்த உட் கட்டமைப்பைக் கொண்டது.
ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால், ஒரே வருடத்தில் பல விருதுகளை பெற்றுள்ளது.
சர்வதேச தரத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியால் இங்கு படித்த மாணவர்கள் எங்கு சென்றாலும் தனி சிறப் போடு விளங்கி கல்லூரிக்கு நற்ª பயரை பெற்று வருகிறார்கள்.
இக்கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைப்பட வேண்டும். இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிக சம்பளத்தில் சர்வதேச
நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.