fbpx
Homeபிற செய்திகள்ஜி.எஸ்.டி வரி உயர்வு கண்டித்து வெட்கிரைண்டர்கள் சங்கம் கோவையில் ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி வரி உயர்வு கண்டித்து வெட்கிரைண்டர்கள் சங்கம் கோவையில் ஆர்ப்பாட்டம்

வெட் கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவையில் வெட் கிரைண்டர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோவை பந்தயசாலை பகுதி யில் உள்ள தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் முன்பாக, நேற்று கோவை மாவட்ட வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள், சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு வெட் கிரைண்டர்கள் மீதான வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வரி உயர்வைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் சௌந்தர்குமார் தலைமை தாங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img