fbpx
Homeபிற செய்திகள்ஜேடி கல்வி நிறுவனம், ஐலேர்னிங்இன்ஜின்ஸ் உடன் விவேகானந்தா கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜேடி கல்வி நிறுவனம், ஐலேர்னிங்இன்ஜின்ஸ் உடன் விவேகானந்தா கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஜேடி கல்வி நிறுவனம், அமெரிக்காவின் ஐலேர்னிங் இன்ஜின்ஸ்(iLearningEngines), விவேகானந்தா கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து திருச்செங்கோட்டில் மாணவர்களுக்காக AI கல்வி தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

திருச்செங்கோடு, எளையம் பாளையம், விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தலைவர் டாக்டர் எம்.கருணாநிதி, நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.குப்புசாமி, முதல்வர் டாக்டர் எம்.தேவி, கணினித் துறைத் தலைவர் டாக்டர் கே.பொற்கொடி ஆகியோர் விவேகானந்தா கல்வி குழும நிறுவனங்கள் சார்பில் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் ஐலேர்னிங் இன்ஜின்ஸ் தலைவர் மற்றும் சிபிஓ பாலகிருஷ்ணன், கோவை ஜேடி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிஇஓ சம்ஜித் தன்ராஜன், சேனல் பார்ட்னர்ஷிப் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவின் இயக்குநர் செரியன் கேபிலிப் ஆகியோரும் பங்கேற்றனர்.

புதிய மற்றும் புதுமையான வடி வங்களை ஆசியாவின் மிகப்பெரிய பெண்களுக்கான கல்வி நிறுவன மாணவர்களுக்கு வழங்குவதற்காக iLearningEngine’s (iLE) கற்றல் ஆட்டோமேஷன் தளம் வாய்ப்பு வழங்கும்.

ஆசிரியர்கள், கற்றல் சூழலுக்கு உதவும் பணியை ஆற்றும். இந்த ஒருங்கிணைப்பு ஜேடி கல்வி நிறுவனத்தின் மூலம் முன்முயற்சியாக மேற்கொள்ளபபட்டுள்ளது.

சிறிய கல்வி நிறுவன மாக கடந்த 1992-ல் நிறுவப்பட்ட விவேகானந்தா கல்வி நிறுவனம் இன்று 21 கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளியுடன் பரந்து விரிந்துள்ளது.

இக்குழுமத்தில் 20 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்வி நிறுவனங்களில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பெண் கள் பட்டதாரிகளாக வெளியேறி உள்ளனர். “சமூக நலனுக்காகவும், பொருளாதார ரீதியாக சவால்களை சந்திக்கும் ஏழை மாணவர்களுக்காக இந்நிறுவனம் நிறுவப்பட்டது.

80 சதவீதம் பேர் கிராமப்புறப் பெண்கள். இவர்கள் முதல் தலைமுறைப்பட்டதாரிகள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றார் விவேகானந்தா கல்வி குழும நிறுவனங்களின் தலைவர் டாக் டர் கருணாநிதி.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை ஒரு முழுமையான மறுசீரமைப்பு மற்றும் மறுசீர மைப்பைக் குறிக்கிறது. உயர்கல்வி சுற்றுச்சூழலை மேலும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கு ஆற்றல் அளிக்கும்.

இந்த கொள்கையின் செயல்வடிவம் தான் விவேகானந்தா கல்வி குழும நிறுவனத்தினுடனான கூட்டாண்மையின் அடையாளம் என்று விவேகானந்தா கல்வி குழு மங்களின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.குப்புசாமி கூறினார்.

கல்வி மூலம் பெண்களை மிகப்பெரிய சக்தியாக மாற்றுவதற் காகத் தான் விவேகானந்தா கல்வி குழுமம் துவக்கப்பட்டது.

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கற்றல் வாய்ப்புகள் தரவே இவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று ஐலேர்னிங்இன்ஜின்ஸ் தலைவர் மற்றும் சிபிஓ பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img