fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கண்களை கட்டிக்கொண்டு மனிதச்சங்கிலி

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கண்களை கட்டிக்கொண்டு மனிதச்சங்கிலி

உலக பார்வை தினம் 2022 அனுசரிப்பையொட்டி பார்வைத்திறன் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க கண்களை மறைத்துக் கட்டிக்கொண்டு பங்கேற்கும் மனிதச்சங்கிலி நிகழ்வை சென்னை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தியது.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை கண் மருத்துவர் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் கூறியதாவது: கண்கள் அக்கறையுடன் பராம ரிக்கப்படுமானால், குறிப்பாக குழந்தைப் பருவத்தில், தற்போது காணப்படும் பார்வைத் திறனின்மை எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்ட அளவை நிகழாமல் தடுக்க இயலும்.

மொபைல்கள், தொலைக்காட்சிப் பெட்டி அல்லது லேப்டாப்கள் போன்ற டிஜிட்டல் திரை அடிப்படையிலான சாதனங்களின் பரவலான பயன்பாடு மிக அதிக எண்ணிக்கையில் பார்வைத்திறன் குறித்த பிரச்சனைகளுக்கு, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வழிவ குத்திருக்கிறது.

20:20:20 விதியை ஒருவர் பின்பற்றுவாரானால், பார்வைத்திறன் தொடர்பான பிரச்சி னைகளுக்கான வாய்ப்புகளை மிகப்பெரிய அளவில் குறைக்க முடியும். இவ்விதியின் கீழ், மேற் குறிப்பிடப்பட்ட எந்தவொரு டிஜிட்டல் சாதனத்தையும் பயன்படுத்தும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இடை வேளை எடுக்க வேண்டும்.

20 நொடிகள் நேரத்திற்கு 20அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை உற்றுநோக்க வேண்டும். கண் களுக்கு குறைவான அளவே அழுத்தம் ஏற்படுவதற்கு இவ்விதி யின் பின்பற்றல் உதவும்.

உலர்ந்த கண்கள் பிரச்சனை வராமல் தடுப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 14 தடவைகள் வரை ஒரு நபர் கண்களை சிமிட்டுவதும் அவசியம்.

50 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது அவரது கண்களை கண் மருத்து ரிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நீரிழிவு சார்ந்த விழித்திரைநோய், நீரிழிவின் காரணமாக உருவாகும் விழிப்புள்ளி திரவத் தேக்கம், கண்புரை நோய் மற்றும் கண் அழுத்தம் போன்ற நீரிழிவு சார்ந்த கண் நோய்களின் ஏதாவதொரு வடிவம் இத்தகைய நோயாளிகளில் 30%-க்கு அதிகமான நபர்களுக்கு ஏற்படுகிறது என்பதே இதற்கு காரணம் என்றார்.

உலக பார்வை தினம் என்பது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழனன்று அனுச ரிக்கப்படும்.

கல்லூரி மாணவர்கள், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 100-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img