fbpx
Homeபிற செய்திகள்டிஜிட்டல் வளர்ச்சியை விரைவுப்படுத்த கன்வெர்ஜன்ஸ் இந்தியா நிகழ்ச்சியில் தைவான் பங்கேற்பு

டிஜிட்டல் வளர்ச்சியை விரைவுப்படுத்த கன்வெர்ஜன்ஸ் இந்தியா நிகழ்ச்சியில் தைவான் பங்கேற்பு

செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, கேமிங் உள்ளிட்ட உருமாற்ற டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தைவானிய நிறுவனங்கள் உலக அளவில் முன்னணியில் உள்ளன. இந்திய டிஜிட்டல் வளர்ச்சிப் பணிகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்தும் வகையில், தைவான் எக்ஸலன்ஸ் வரும் 23 முதல் 25 வரை புது தில்லியில் நடை பெறவுள்ள கன்வெர்ஜென்ஸ் இந்தியா 2022 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளது.

கன்வெர்ஜென்ஸ் இந்தியா இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கண்காட்சிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு, தைவான் எக்ஸலன்ஸின் பங்களிப்பு பார்வையாளர்களுக்கு மின்னணுவியல், தொலைத்தொடர்பு, விளையாட்டு, உற் பத்தித்திறன், ஆற்றல் ஆகியவற்றில் சில அதிநவீன தொழில்நுட்பம், புதுமைகளைப் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கும். அவிர், பென்கூ, சைபர்பவர், எம்எஸ்ஐ, பிளானட் மற்றும் சைஸல் போன்ற 6 சிறந்த நிறுவனங்கள் தங்களின் சமீபத்திய தயாரிப்புகளை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தவுள்ளன.

இதன் மூலம் பார்வையாளர்கள் செயற்கை நுண்ணறிவு (கிவீ) சம்பந்தப்பட்ட எதிர்கால டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற முடியும்.

இந்த ஆண்டு, மேம்படுத்தப்பட்ட வர்த்தக ஒத்துழைப்பிற்கான கூடுதல் சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கும், ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கும் தைவானும் இந்தியாவும் ஈடுபடவுள்ளதால் தைவான் எக்ஸலன்ஸ் நிறுவனத்தின் இந்த ஒருங் கிணைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந் ததாகிறது.

தைவான் எக்ஸலன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்க்வு கூறியதாவது: இந்தியாவின் டிஜிட்டல் தொழில்துறையானது பல்வேறு துறைக ளில் தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உந்து சக்தியாக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது.

தைவான் எக் ஸலன்ஸ் எப்போதும் அதிநவீன, உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் கண் டுபிடிப்பு முயற்சிகளுக்கு பங்களிக்க ஆர்வமாக உள்ளது.

இரு நாடுகளும் உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும் நேரத்தில், கன்வெர்ஜென்ஸ் இந்தியா போன்ற நிகழ்வுகள், பரஸ்பரம் திறமையுடன் பலனடைவதற்கான சிறந்த தளமாகும் என்றார்.

தைவானுடனான இந்தியாவின் வர்த்தகம் 2018-19ல் 7.1 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2021ல் 7.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img