fbpx
Homeபிற செய்திகள்டெக்ஸ்வேலியில் மெகா தீபாவளி பஜார் கண்காட்சி- கோலாகல கொண்டாட்டம்

டெக்ஸ்வேலியில் மெகா தீபாவளி பஜார் கண்காட்சி- கோலாகல கொண்டாட்டம்

ஈரோடு சித்தோடு அருகே பெங்களூரு – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் 20 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் டெக்ஸ்வேலியில் இந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு மிகப்பெரிய கொண்டாட்டங்களை நடத்த டெக்ஸ்வேலி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து செய்தி யாளர்கள் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது டெக்ஸ்வேலி துணைத் தலைவர் சி.தேவராஜன், நிர்வாக இயக்குனர் பி.ராஜ சேகர் , செயல் இயக்குனர் டி.பி.குமார் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிலாஸ் பால் ஆகியோர் கூறியதாவது:

தீபாவளிக்கு டெக்ஸ்வேலி என்ற முழக்கத்தோடு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நாங்கள் துவக்கியுள்ளோம். வருகிற தீபாவளி பண்டிகையில் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில் , டெக்ஸ்வேலி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் அக்டோபர் 24 ஆம் தேதி வரை பலப்பல கொண்டாட்ட நிகழ்வுகள் தினம்தினம் நடைபெற உள்ளது. அக்டோபர் 12 முதல் 16 வரை மெகா தீபாவளி பஜார் என்ற பிரம்மாண்டமான தீபா வளி விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் 140 – க்கும் மேற்பட்ட அரங்குகள் நிறைந்த இந்த கண்காட்சியினை ஈரோடு மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார். இந்த அரங்குகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவர்வதாக அமையும் .

வீட்டு உப யோகப்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் , கார்கள் , மோட்டார் சைக்கிள்களின் அணிவகுப்பு , பர்னிச்சர்கள் ஆகியவற்றுடன் அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், ஆயுர்வேத மருந்தகம், கணினிப் பொருட்கள், டாட்டூஸ், அழகுநிலையங்கள் என்று இதுவரை இல்லாத அள வுக்கு பிரம்மாண்டமாக வித்தியாசமாக நடைபெறுகிறது.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை மகிழ்விக்க 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரத்யேக வேடிக்கை விளையாட்டு மையம், 25 க்கும் மேற்பட்ட உணவகங்களுடன் கூடிய உணவு திருவிழா , என அனைத்தும் வாடிக்கை யாளர்கள் பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி விழாவில் அக்டோபர் 14,15,16 ஆகிய நாட்களில் பிரபல சின்னத்திரை கலைஞர்கள் பங்குபெறும் ஸ்டார் ஷோ நிகழ்வுகளும் 20 – ம் தேதி சங்கமம் என்ற தமிழ் கலாசார திருவிழாவும் நடைபெற உள்ளன.

இந்த தீபாவளிக்கு டெக்ஸ்வேலி விழாவில் ஸ்லோகன் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு பல பல பிரம்மாண்ட பரிசுகளும் உள்ளன.
முதல் மெகா பரிசாக ஒரு கார் ஒருவருக்கும் , இரண்டாவது பரிசாக 3 நபர்களுக்கு இருசக்கர வாகனமும் , மூன்றாம் பரிசாக 50 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயமும் ( தினமும் 5 நபர்களுக்கு என்ற முறையில் ) வழங்கப்பட உள்ளது.

இதன் தொடர்ச்சியாக கோடை கால ஆடைச் சந்தையை முன்னிட்டு TAG EXPO EDITION -2 வருகிற 2023 ம் ஆண்டு ஜனவரி 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img