fbpx
Homeபிற செய்திகள்‘டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2023’: இந்தியாவில் 6-வது இடம் பிடித்த சிமாட்ஸ் பல்கலைக்கழகம்...

‘டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2023’: இந்தியாவில் 6-வது இடம் பிடித்த சிமாட்ஸ் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகங்களில் 3-வது இடம்

உலகம் முழுவதும் 104 நாடுகளில் உள்ள 1799 பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ‘டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2023’ வெளியிடப் பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் தரவரிசையில் 501-600/1799வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுடன் ஒப்பிடுகையில் 6-வது இடமும், தனியார் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆராய்ச்சி பிரிவின் கீழ், வெளியிடப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையில் இப்பல்கலைக்கழகம் 57-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வலிமையைக் காட்டுகிறது.

இந்த தரவரிசை கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச கண்ணோட்டம் ஆகிய 4 பகுதிகளில் ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்திறனை அளவிடுகிறது.

ஒவ்வொரு பல்கலைக் கழகத்தின் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டு இந்த தர வரிசை ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் 13 அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு தரவரிசை 1 கோடியே 55 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகளில் 12 கோடிக்கும் அதிகமான மேற்கோள்களை பகுப்பாய்வு செய்தது.
இதில் உலகளவில் உள்ள 40 ஆயிரம் அறிஞர்களின் கருத்துக்கணிப்பு பதில்களை உள்ளடக்கி உள்ளது.

ஒட்டுமொத்தமாக, தரவைச் சமர்ப்பித்த 2,500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து 6 லட்சத்து 80 ஆயிரம் தரவுப் புள்ளிகள் சேகரிக்கப்பட்டன.

உலகம் முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுகள் மற்றும் தொழில் வல்லுநர்களால் நம்பப்படும் இந்த ஆண்டு லீக் தரவு, உலகளவில் உயர்கல்வி செயல்பாடானது எவ்வாறு மாறுகிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img