fbpx
Homeபிற செய்திகள்‘டை’ சந்தையில் ‘ஒன் டூ ஒன் ஹெல்ப்’ பங்கேற்பு

‘டை’ சந்தையில் ‘ஒன் டூ ஒன் ஹெல்ப்’ பங்கேற்பு

சென்னையில் நாளை (அக்.8) நடைபெறவிருக்கும் ‘டைகான் 2022’ நிகழ்வின் ஓர் அங்கமான ‘டை’ (TiE) சந்தையில் தனது பங்கேற்பை ‘1to1help’ நிறுவனம் அறிவித்திருக்கிறது.

பணியாளர் உதவி செயல்திட்ட சேவை வழங்கலில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ‘1to1help’ புகழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பணியாளர்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கு பல்வேறு செயல்திட்ட தொகுப்பின் வழியாக பணி வழங்கும் நிறுவனங்களுக்கு ‘1to1help’ ஆதரவளித்து வருகிறது.

பல்வேறு வகையான இடையீட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆதார வளங்களின் மூலம் பணியாளர்களின் மனம் மற்றும் உணர்வு சார்ந்த நலத்திற்கு இது உதவுகிறது.

பணியாளர்கள் அவர்களது உணர்வுசார்ந்த நலத்தை சிறப்பாக நிர்வகிப்பதை ஏதுவாக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த கவுன்சிலிங் (ஆற்றுப்படுத்தல்) சேவையை ‘1to1help’வழங்குகிறது.

4.5 மில்லியன் நபர்களை உள்ளடக்கிய 750-க்கும் அதிகமான நிறுவனங்களுடன் உலகளாவிய கூட்டுவகிப்பு செயல்பாடுள்ள நிறுவனம் என்ற பெருமை இந்நிறுவனத்திற்கு இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தின்போது இளைய மற்றும் சிறிய நிறுவனங்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தன.

எந்தவொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் பணியாளரின் நலவாழ்வு மிக முக்கியமானது. பணியாளரின் நலன் குறித்து அக்கறை கொண்டிருப்பது சிறப்பான பணியாளர்களை தேர்வுசெய்வதற்கும் மற்றும் தக்கவைத்துக் கொள்வதற்கும் மிகவும் இன்றியமையாதது.

நலவாழ்வுக்கான முன்முயற்சிகளை கற்றுக்கொள்ளவும் மற்றும் அனுபவரீதியாக செயல்படுத்தவும் மற்றும் குறிப்பிட்ட உடல்நல இலக்குகளை எட்டவும் பணியாளர்களுக்கு உதவுவதற்கெனவே‘1to1help’-ன் பயிற்சி திட்டங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.

TiE சந்தை நிகழ்வில் உணவு ரீதியான ஆரோக்கியம் குறித்து அறிவையும், விழிப்புணர்வையும் பரப்புவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களோடு கலந்துரையாடி செயல்படுவதை ‘1to1help’ நிறுவனம் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனத்தின் சிறப்பான வெற்றிக்கு நல்ல பங்களிப்பை வழங்கும் ஒரு பார்ட்னராக அது எப்படி இருக்க முடியும் என்பதை எடுத்தியம்புவதும் இப்பங்கேற்பின் நோக்கமாகும்.

படிக்க வேண்டும்

spot_img